நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு கடந்த சில தினங்களாக கணத்த மழை பெய்து வருகிறது.
நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் நீர் மட்டம் உயர்ந்து இன்று காலை மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக கொத்மலை ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன் சென் கிளையார் நீர் வீழ்ச்சியின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.
எனவே இந்த ஆற்றுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சார சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலைவாஞ்ஞன்