தொழிலாளர் தேசிய சங்கத்தின் 53 வருட வரலாற்றில் மே 7 ம் திகதி நடைபெறவுள்ள மேதினக்கூட்டத்திற்கு அடுத்த கட்ட போராட்டத்திற்கான போராளிகளாக வருகைத்தர வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னனியின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக்கூட்டம் தொடர்பில் அட்டன் டி கே.டபி.யூ கலாசார மண்டபத்தில் 30.04.2018 இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தர்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதி செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய சோ.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளர் செயலாளர் பிலிப் மத்திய மாகாணசபை உறுப்பினகளான ராம்.உதயா.சிங் பொண்னையா.உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் புத்திரசிகாமனி உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன். இளைஞர் அணித்தலைவர். சிவனேசன். அமைப்பாளர்கள் மாவட்ட தலைவர்கள் தலைவிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்
மனித வாழ்வு என்பது ஒரு போராட்டமே பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டமாகவே காணப்படுகின்றது அந்த போராட்ட வாழ்வில் வெற்றி தோல்வி வருவது சகஜம் அது போலவே அரசியலும் ஒரு போராட்ட களமே இவ்வாறு நாம் எல்லாவற்றையும் போராட்டம் என கூறினலும் போராட்டங்ளினூடாக கிடைக்கப்பட்ட ஒரு ஒரு தினம் உலக தொழிலாளர் தினம் மட்டுமே இவ்வாறு கிடைத்த மே தினம் தொழிலாளர் தேசிய சங்கம் தனது 53 வருட வரலாற்றில் எதிர்வரும் மே.ஏழாம் திகதி தலவாக்கலை நகரில் மேதினத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது போரட்டத்தினூடாக கிடைத்த தொழிலாளர் தினமாகிய மேதினத்திற்கு ஆதராளர்களாக. தொண்டர்களாக அன்றி போராளிகளாக வருகைத்தருமாறு அழைப்பு விடுகின்றேன்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்