மைத்திரி விக்ரமசிங்க சீஐடிக்கு அழைப்பு – ஐ.தே.க கவலை!

0
17

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு குறித்து கல்விமான்கள் மற்றும் ஆர்வலர்கள் குழுவினர் தமது கவலையை தெரிவித்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி அறிக்கை விடுத்துள்ளது.

வால்வர்ஹாம்டன்பல்கலைக்கழகம் அவருக்க கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது, பாலின சமத்துவம் குறித்த அவரது பல தசாப்த கால சுயாதீனமான ஆய்வுகள் மற்றும் பங்களிப்புகளுக்காகவே அன்றி, அரசியல் காரணங்களுக்காக அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் மற்றும் சர்வதேச ஆலோசகர் என பல துறைகளில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவர் ஆற்றிய சிறப்பான சேவைகள் இந்த அறிக்கையில் நினைவுகூரப்பட்டுள்ளன.

எந்தவொரு விசாரணையும் வெளிப்படையாகவும் முறையான நடைமுறைகளின் படியும் நடக்க வேண்டும். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் ஒரு சுயாதீன கல்விமானுக்கு தேவையற்ற தொந்தரவாகவோ அல்லது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவோ அமையக்கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்விச் சுதந்திரம் மற்றும் கல்வியாளர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் நோக்கங்களுக்காக கல்வியாளர்களை இலக்கு வைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here