மொத்த சர்ச்சையையும் முடித்து வைத்த பிக் பாஸ் அபினய் மனைவி!

0
192

பிக் பாஸ் அபினய்யின் மனைவி அபர்ணா, இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5 தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை 6 பேர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது நிரூப், ராஜு, இமான், சிபி, ப்ரியங்கா, பாவ்னி, தாமரை, வருண், அக்ஷ்ரா, அபிஷேக், அபினய், அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஆரம்பத்தில் இருந்தே பாவ்னி – அபினய் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

இதனிடையே அபினய் தன்னை காதலிப்பதாக சந்தேகித்த பாவ்னி, அவரிடமே இதுகுறித்து நேரடியாகவே கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த அபினய், அப்படி எதுவும் இல்லை நமக்குள் நல்ல நட்பு மட்டும் இருப்பதாக கூறியதையடுத்து பின்னர் இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த வாரம் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ட்ரூத் அண்ட் டேர் விளையாடினர். அப்போது அபினயிடம், நீ பாவ்னியை லவ் பண்றியா? என அனைவரின் முன்னிலையிலும் ஓப்பனாக கேட்டார் ராஜு. இதனை கேட்டு பாவ்னி மற்றும் அபினய் மட்டுமின்றி சக ஹவுஸ் மேட்ஸ் மற்றும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து அபினய் திருமணமானவர். அவருக்கு குடும்பம், மனைவி, குழந்தை இருப்பது தெரிந்தும் நீ எப்படி இந்த கேள்வியை கேட்கலாம்? என பிரியங்கா, ராஜுவிடம் கேட்டார். அதற்கு ராஜு அந்த விளையாட்டின் போது என் மனதில் தோன்றியதை தான் நான் எதார்த்தமாக கேட்டேன். ஆனால் நான் கேட்டிருக்க கூடாது என ராஜு கூறினார்.

ஆனால் இந்த விளையாட்டிற்கு பின்னர் பல இடங்களில் அபினய், பாவ்னி மீது கூடுதலாக பாசமாக இருப்பது உண்மை தானோ என அனைவரையும் நினைக்க வைத்துள்ளது. சமீபத்தில் அமீருடன் பாவ்னி சிரித்து பேசி கொண்டிருந்தார். அப்போது இருவரும் மாறி மாறி அடித்து விளையாடினர். அங்கே அபினையும் இருந்த நிலையில் இதனை பார்த்து அவர் கடுப்பானது வெளிப்படையாகவே தெரிந்தது. இதனால் ராஜு கூறியது உண்மை தானோ என நெட்டிசன்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில் தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் அபினய்யின் மனைவி அபர்ணா அபினய் இதுகுறித்து போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், நீ எந்த மாதிரியான ஆள் என்பது எனக்கு தெரியும். என் அளவிற்கு உன்னை யாருக்கும் தெரியாது. லவ் யூ எப்போதும், அபர்னா அபினய், அபினய் டீம் எப்போதும் என குறிப்பிட்டு , தனது கணவர் அபினய் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் யார் என்ன கூறினாலும் கணவர் மீதான நம்பிக்கை பாராட்டக்கூடியது என கமெண்ட் செய்து வருகின்றனர். அபினய் ஆரம்பத்தில் சரியாக விளையாடாத நிலையில் தற்போது கேமை புரிந்து விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள் வட்டாரமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here