வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் மொரகந்த கொடவெவ அருகே 2 கிலோ 755 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.