மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆயிரத்து 204 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 19 நிமிடங்களுக்கு பின்னர் 4.9 மெக்னிட்யூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பாரிய கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.