இணையவழ மோசடி மற்றும் பணமோசடி அதிகரித்து வருவதைக் சுட்டிக்காட்டி, நேபாளத்தின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு டெலிகிராம் என்ற செயலியை தடை செய்துள்ளது.
நேபாள தொலைத்தொடர்பு ஆணைக்குழு (NTA) விடுத்துள்ள அறிவிப்பில், அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் டெலிகிராம் தளத்திற்கான அணுகலை உடனடியாக கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது, இது குற்றச் செயல்களுக்காக அதிகளவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவில் பிறந்த பாவெல் மற்றும் நிகோலாய் துரோவ் சகோதரர்களால் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டெலிகிராம், வலுவான குறியாக்கம், தனியுரிமை அம்சங்கள் மற்றும் பெரிய குழு செட்கள் மற்றும் ஒளிபரப்பு சேனல்களுக்கான ஆதரவுக்கு பெயர் பெற்ற கிளவுட் அடிப்படையிலான செய்தியிடல் செயலியாகும்.இந்நிலையில் அது நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது
அந்நாட்டில் சமூக சீர்குலைவு மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் குறித்த கவலைகள் காரணமாக நவம்பர் 2023 இல் தடைசெய்யப்பட்ட காணொளி பகிர்வு செயலியான TikTok க்கு எதிரான இதேபோன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இத்தகைய தடைகளை அமல்படுத்துவது கடினம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர், பல பயனர்கள் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகளை (VPNகள்) நோக்கித் திரும்புகின்றனர். எனவே முழுமையான தடைகளுக்குப் பதிலாக வலுவான ஒழுங்குமுறை மற்றும் வழிமுறைககள் அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.