தமது உத்தியோகபூர்வ இணையத்தளமானது எந்தவொரு பரிவர்தனை நடவடிக்கைகளுக்குமான வசதியினை கொண்டிருக்கவில்லை என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையத்தள முறைகேடுகள் தொடர்பில் தபால் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, தமது உத்தியோகபூர்வ இணையத்தளமானது எந்தவொரு பரிவர்தனை நடவடிக்கைகளுக்குமான வசதியினை கொண்டிருக்கவில்லை என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை போன்றதொரு இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கடன் அட்டை மற்றும் பற்று அட்டைகளின் தகவல்களை பெற்றுக்கொள்ளும் மோசடி செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்க வேண்டாமென தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார தெரிவித்துள்ளார்.அத்துடன், தபால் திணைக்களத்தின் இணையத்தள முகவரியும் முறைகேடான முறையில் பயன்படுத்தப்படுவதாக தபால்மா அதிபர் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.