மோசமான சாதனை பட்டியலில் இணைந்த ரோகித், ராகுல், அபிஷேக் சர்மா!

0
41

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலயே கோல்டன் டக் அவுட்டானார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்தாவது இந்திய வீரராக அவர் ஒரு மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

போட்டியின் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக ரோகித் சர்மா, பிரித்வி ஷா, கே.எல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்த மோசமான சாதனையில் இருந்த வேளையில் தற்போது ஐந்தாவது இந்திய வீரராக இந்த பட்டியலில் அபிஷேக் சர்மா இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here