இன்றைய தினம் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் திரு.ஜனார்த்தனன் இராகலை தோட்டத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இராகலை தோட்ட மக்கள் தம் ஊருக்கு செல்வதற்க்கான பாலத்தை புனரமைத்து கொடுக்குமாறும் அவர்களுடைய போக்குவரத்து பிரச்சினைகளையும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ராஜாராம் அவர்களிடம் முன்வைத்ததற்க்கு இணங்க அவருடைய பணிப்பின் பேரில் அவ்விடத்திற்க்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பிரதேச சபை உறுப்பினர் அரிச்சந்திரன் தொழிற்சங்க பிரதநிதி செல்வநாதன் மாவட்ட தலைவர் செல்வா நண்பர் சுரேஸ் போன்றோரின் பங்கு பற்றுதலோடு மக்களும் கலந்து கொண்டனர்.
பா.பாலேந்திரன்