கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் காட்டு யானைகள் உட்புகுந்து பாடசாலை நுழைவாயில் மற்றும் சுற்றுமதில் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.பி.ஜெமீல் தெரிவித்தார்.
ரிதிதென்ன குடியிருப்பு பகுதிக்குள் திங்கட்கிழமை (4) அன்று அதிகாலை1 மணியளவில் உட்புகுந்த யானைகள் பாடசாலை நுழைவாயில் மற்றும் சுற்றுமதிலை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.