யாழ் (Jaffna) நெல்லியடி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (31) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல்லியடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை பகுதியிலுள்ள ஒன்பது வயதுச் சிறுமியே இவ்வாறு தகாதமுறைக்கு உற்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.