யாழில் லஞ்ச் சீட்டுக்கு பதிலாக வாழை இலை – இன்று முதல் நடைமுறை!

0
70

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு, மற்றும் உணவு பொதியிடல் போன்றவற்றுக்கு லஞ்ச் சீட் பயன்படுத்துவதற்கான தடை இன்று (01) முதல் நடைமுறைக்கு வருகிறது.

உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லஞ்ச் சீட்டுக்கு பதில் வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலைகளை உணவு பொதியிடலுக்கு பயன்படுத்துமாறு பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆலோசனை விடுத்துள்ளார்.

குறித்த அறிவிப்பை மீறிச் செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here