யாழில் 16 வயதுச் சிறுவன் மீது தாக்குதல்!

0
7

யாழ் பருத்திதுறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால் அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 16 வயதான சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளு்ளது.

வரணிப் பகுதியைச் சேர்ந்தவர்களே குறித்த கும்பலுடன் வந்து தமது வீட்டில் உள்ளவர்களைத் தாக்கியதாகவும் அது தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த கும்பலை கூட்டி வந்தவர்களை கைது செய்து பின்னர் விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்வில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here