யாழில் 400 வருடங்கள் பழமை வாய்த்த சிவாலயத்தில் கும்பாபிஷேகம்!

0
90

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது.

மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்டது.

இந்நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் அதன் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி கும்பாவிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவனத்தில் பணிபுரிகின்ற வருபவரான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியிருந்த நிலையில் குறித்த ஆலயம் மீள் எழுச்சி கண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here