வடமராட்சி உப்பு வல்லை சந்திப்பகுதியில் 500 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (22.01.2023) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி அரச புலனாய்வாளர்களின் தகவலிற்கு அமைய நெல்லியடி காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.28 வயதுடைய சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர் அண்மைக் காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஒரு மாத்திரை 250 ரூபாய் வீதம் விற்பனை செய்வதாக அரச புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி கைது செய்யபட்டுள்ளார்.
மேலும் நெல்லியடி காவல்துறையினர் சந்தேகநபரை பருத்திதுறை நீதிமன்றிற்கு முற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.