யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
162

வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலையே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 1,491 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1, 843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் 1,491 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக 1,843 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலையே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

எனவே டெங்கு தொற்றினை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here