யாழ்ப்பாணத்தில் நாய் இறைச்சிக் கொத்து ; உணவக உரிமையாளருக்கு 65000 ரூபா அபராதம்

0
172

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உணவக உரிமையாளர் ஒருவர் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் உணவக உரிமையாளருக்கு 65000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த உணவகத்தை மூடுமாறு தெல்லிப்பளை பொதுச் சுகாதார பரிசோதகருக்கு நேற்று 20ஆம் திகதி உத்தரவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இறைச்சி மாதிரியை அரச ருசிகருக்கு அனுப்பி வைத்த நீதவான், அது தொடர்பான அறிக்கையை விரைவில் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் இரவு உணவிற்காக இந்த உணவகத்தில் இருந்து 500 ரூபாய்க்கு மாட்டிறைச்சி தட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.இறைச்சியை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிட முற்பட்ட போது நாயின் முடியை ஒத்த இரண்டு இறைச்சித் துண்டுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இரவு பொது சுகாதார பரிசோதகரை கண்டுபிடித்து இறைச்சி மாதிரியை அவரிடம் சமர்ப்பித்தார்.குறித்த உத்தியோகத்தர் மற்றைய அதிகாரிகள் குழுவுடன் உணவகத்திற்குச் சென்று ஆய்வு செய்த போது அங்கு விற்பனை செய்யப்படவிருந்த இறைச்சி கெட்டுப்போனதாகவும், இறைச்சி மனிதர்கள் உண்ணத் தகுதியற்றது எனவும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்படி இறைச்சி மாதிரிகளை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளரை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.இறைச்சி மாதிரிகள் மாட்டிறைச்சியா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக அரசாங்க சுவையாளரின் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here