யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலையகத்திற்கு விஜயம்

0
183

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலையகத்திற்கான விஜயத்தின் போது அட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

விஜயத்தின் போது மேற்படி அட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டதோடு, விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

அதன்பின் கொட்டகலை பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு சென்று அங்கு தேயிலை தூள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என பார்வையிட்டதுடன், முதல் முறையாக லயன் குடியிருப்புகளுக்கு சென்று அங்கு உள்ள இந்திய வம்சாவளி மலையக மக்களிடம் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இந்திய வீடமைப்பு திட்டத்தை பற்றி மக்களுக்கு எடுத்துகூறியதுடன், எதிர்வரும் காலங்களில் பத்தாயிரம் இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் தொடர்பிலும் மக்களிடம் தெளிவுப்படுத்தினார். இதன்போது, இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரனுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது, கண்டிக்கான பதில் இந்திய உயர்ஸ்தானிகர் கிருஷ்ணபிரசாத், இ.தொ.காவின் உப செயலாளரும், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளரும், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி, கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் பெருமாள் நேசன், கொட்டகலை பெருந்தோட்ட யாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொகான் எட்வட் போன்றோர் உடனிருந்தனர்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here