யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அழகையா துரைராஜாவின் உருவச் சிலை ஒன்றை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது. யாழ் திருநெல்வேலிச் சந்தியில் உருவச்சிலை அமைக்கப்படவுள்ளது.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நல்லூர் பிரதேச சபைக் கூட்டத்தில் தவிசாளர் மயூரன், தீர்மானத்தை அறிவித்தார்.
உலகம் போற்றும் நேர்மையான கல்வியாளர் ஒருவரின் இனத்துக்கான அர்ப்பணிப்பு என்றும் மறக்க முடியாதது. அது வரலாறு. இந்த வரலாற்றை பதிவு செய்த மாமனிதனுக்கு உருவச்சிலை அமைப்பதில் பெருமை கொள்வதாக பிரதேச சபை உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
உருவச்சிலையை அமைக்க இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதில் பொருத்தமான ஒரு இடத்தை விரைவில் தெரிவு செய்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
திருநெல்வேலிச் சந்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அல்லது யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு முன்னால் உள்ள நடைபாதைக்கு அருகில், உருவச்சிலையை அமைப்படும் என தவிசாளர் மயூரன் தெரிவித்தார்.
தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.