யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திய பெற்றோர்!

0
170

பாடசாலை மாணவனின் பெற்றோரால் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்க்கு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.“நேற்று  யாழ் நகரப் புறத்தில் உள்ள பாடசாலையில்,ஆசிரியர் ஒருவர் பெற்றோர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் .நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில்,அரசின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பாடசாலையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெறுகிறது.

இந்த நிலையில் ஆசியர்களின் சொற்படி மாணவர்கள் நடக்காத பட்சத்தில் ,பாடசாலையில் பல முரண்பாடுகள் ஏற்படுகிறது.இதனை பெற்றோர்கள் பேசித் தீர்க்கலாம்.ஆனால் இவ்வாறு கைகலப்பில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

ஆகவே ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் கண்டிக்கிறது. குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட மாணவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர்களின் பாதுகாப்பை வலயக் கல்வி பணிமனை உறுதி செய்ய வேண்டும். குறித்த பெற்றோர் மீது சட்ட நவடிக்கை எடுக்க வேண்டும்” என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here