யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார்.
இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும், இறப்புக்கான காரணத்தை தெரிவித்தாலே சடலத்தை பொறுப்பேற்போம் என பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.