கல்வித்துறையில் வளர்ச்சி ஏற்பாட்டால் நாட்டில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டிவிடும் என பெருந்தோட்ட கிராமிய அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்தலவாக்கலை சுமன சிங்கள வித்தியளயத்தில் 14.05.2018 இடம்பெற்ற சித்திரம் மற்றும் பத்திரிகை கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
மாணவர்களின் வாசிப்புத்திரன் மற்றும் ஆகத்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆர்.பி ஜயந்தவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு நாள் கண்காட்சியில் அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்
மாணவர்களிடத்தில் தாய் மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் பொது மொழியான ஆங்கில மொழிக்கு நாடளாவிய ரீதீயில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
ஆனால் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் அளவிற்கேனும் வளர்ச்சியடைந்துள்ளனரா என பார்க்க வேண்டும் வளமான ஆசிரியர்களை உறுவாக்கும் பொருப்பு அதிபர்களினதோ பெற்றோர்களோ அல்ல அரசியல்வாதிகளின் பொருப்பாகும்.
உயர்தரம் கற்றவுடன் இலகுவில் தொழில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் அதே போல சட்டமும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு விதமாகவும் சாதாரண மக்களுக்கு ஒரு விதமாகவும் தற்போது காணப்படுகின்றது.
எனக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்றார் மேலும் நாட்டின் நீண்டகால யுத்ததை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷவையே மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். இது வரைகாலமும் நமது மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து அறியமுடியவில்லை அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு சரியான சேவை செய்ய வேண்டும் என்றார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்