கல்வி இராஜாங்கஅமைச்சரும் மலையகமக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கொழும்பு மாகோலயில் அமைந்துள்ள யொசிடாசோகன் சர்வதேச பாடசாலைக்கு நேற்று (22.08.2018) விஜயம் செய்தார்.
இந்தபாடசாலைக்கு வணக்கத்திற்குரிய பனகள உபதிஸ்ஸ தலைவராக செயற்படுவதுடன் இந்தபாடசாலையானது ஜப்பானியஅரசாங்கத்தின் நிதிஉதவியுடன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலையக மாணவர்களை இந்த பாடசாலைக்கு உள்வாங்குவது தொடா்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இது தொடா்பாக மிகவிரைவில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளஉள்ளதாகவும் வணக்கத்திற்குறிய பனகள உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)