பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என விஜய் உத்தரவு. நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
தற்போது 10, 12-ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17-ஆம் திகதி விஜய் சந்திக்கிறார்.அப்பொழுது 10,12-ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் போது பொதுவெளியில் விளம்பர பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என மன்ற நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். விஜயின் உத்தரவால் இயக்க நிர்வாகிகள் நீலாங்கரை பகுதிகளில் உள்ள சுவர்களில் வரையக் கூடிய விளம்பரங்களை செய்து வருகின்றனர்.