ரணிலுக்கு முக்கிய பதவியை வழங்க தயாராகும் கோட்டாபய!

0
148

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவின்பொருளாதாரசபையைபிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரணில் விக்கிரமசிங்க பொருளாதார சபையில் இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிய வருகிறது.

நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே இந்த பொருளாதார சபை நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் பொருளாதார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிதி அமைச்சின் செயலாளர், ஆளுநர் மற்றும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆகியோர் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here