ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது வரவேற்கத்தக்க விடயமாகும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது காலத்தின் கட்டாயம். இதற்கு முன்னரே இடம்பெற்றிருக்க வேண்டும் அவ்வாறு இணைந்து செயற்பட்டிருந்தால் பல்வேறு நன்மைகள் விளைந்திருக்கும்.தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும்.
எனினும் கடந்த காலங்களில் இரு தலைவர்கள் இடையிலும் இருந்த கருத்து வேறுபாட்டினால் அந்த முயற்சிகள் கைகூடவில்லை.
எதிர்காலத்தில் இரு தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் . அவ்வாறு செயற்படுவர்களாயின்அதனை நாம் முழுமையாக வரவேற்பததோடு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சஜித் மற்றும் ரணில் ஆகியோரிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்ததோடு சஜித், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து அவரது ஐக்கிய தேசிய கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டது.
அத்துடன் சஜித்துடன் இணைந்தவர்களது உறுப்புரிமையும் நீக்கப்பட்டது. இதன்போது இராதாகிருஷ்ணன் எம்பியும் சஜித் அணியுடன் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.