நுவரெலியாவிலிருந்து ருவான்வெல்ல பகுதிக்கு சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றிக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
19.03.2018 அன்று மாலை 5 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். லொறியில் தடுப்புகட்டை செயழிலந்ததே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிஷாந்தன் , ஷான் சதீஸ்