ரத்கிந்த மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

0
67

உல்ஹிட்டிய – ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று(12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.

அதன்படி, தற்போது ஏழு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர் மட்டத்தை தாண்டியுள்ளது.

அதன்படி, மூன்று வான் கதவுகள் தலா ஒரு மீற்றர் அளவிலும், ஏனைய 3 வான் கதவுகள் தலா 0.5 மீற்றர் அளவிலும் திறக்கப்பட்டுள்ளன.

அடுத்த சில மணிநேரங்களில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மாற்றமடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளும் இன்று எடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here