ரம்புக்கனையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு இ.தொ.கா தலைவர் நேரில் சென்று இரங்கல்!

0
192
ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நாரண்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷான் என்பவரின் வீட்டுக்கு நேரில் சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், அன்னாரது குடும்பத்துக்கு இ.தொ.கா சார்பிலும் மலையக மக்கள் சார்பிலும் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன், மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு இ.தொ.கா சார்பாகத் தமது கடுமையான கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றும் பக்கபலமாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
இதன்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் அண்ணாமலை பாஸ்கரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here