ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

0
156

ரம்புக்கனை போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here