இராகம இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகிக்கும் பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.
இராகம இரயில் நிலையத்தில் உள்ள இரயில் நிலைய அதிபர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
இலங்கை இரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன், இரயில் நிலையத்தில் உள்ள ஊழியர்கள் பலர் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இரயில் நிலையத்தின் கடமைகளை முன்னெடுப்பதற்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை இரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.




