எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில், ரயில் பயண கட்டணத்தை உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
தற்போது 55 ரூபாவினால் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழலில் ரயில் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை எனில், எதிர்காலத்தில் அதற்கான போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, இந்த காரணிகளை சுட்டிக்காட்டி ரயில் பயணக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.