ரஷ்யாவின் யகுதியா பகுதியில், சுரங்க தொழிலாளர்கள் சிலரை ஏற்றி சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனரென அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து, டெனிசோவ்ஸ்கி சுரங்கம் மற்றும் நிலக்கரி பதப்படுத்தும் ஆலை அமைந்த வீதியில் இடம்பெற்றது. ரஷ்யாவில் இத்தகைய தொழிற்சாலை சார்ந்த விபத்துகள் பரவலாகவே நடைபெறும் நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் இதற்குக் காரணம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்ற நிலையில், உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று ஒரு நாள் இரங்கல் தினமாக அனுசரிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.