ராகலை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவன் மீது காதல் கொண்டு ஏமாற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறிப்பிட்ட இளம் ஆசிரியை மாணவனுடன் உல்லாசமாக கொழும்பு உட்பட பல இடங்களுக்கு உல்லாசமாக சென்றுள்ளார்.
அது மாத்திரமன்றி குறித்த பெண் ஆசிரியை மாணவனோடு மிகவும் நெருக்கமாக பழகி யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியை திடீரென தனக்கு பெண் பார்த்து இருப்பதாகவும் தன்னை மறந்து விடுமாறும் கூறியுள்ளார் இதை ஏற்க மறுத்த மாணவன்
ஆத்திரமடைந்து அதிக எண்ணிக்கையான வில்லைகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து தற்போது அம்மாணவன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதற்கு காரணமான ஆசிரியைக்கு எதிராக உரிய விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட் வேண்டுமென மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறான ஆசிரியைகள் காரணமாக பெண் இனத்திற்கு மட்டுமன்றி ஆசிரியர் வம்சத்திற்கே அவமானம் . பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் ஆசிரியைகள் இவ்வாறு நடந்து கொள்வது நியாயமா? இதுவும் சிறுவர் துஷ்பிரயோகம் தானே.
சுஜீவன்.