ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை சிறந்த வெற்றி.

0
187

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக எவின் லூயிஸ் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நதன் குல்டர்நைல் 14 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 91 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக இசான் கிசான் 25 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சேத்தன் சகாரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here