ராணி எலிசபெத் இறுதி மரியாதை; என்னென்ன சடங்குகள் நடக்கும்?

0
203

இன்று இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி மரியாதை நடைபெறும் நிலையில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். அதை தொடர்ந்து அவரது உடல் ஸ்காட்லாந்து கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தியபின் மீண்டும் இங்கிலாந்து கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இன்று ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதன்படி, காலை 11 மணி வரை பொதுமக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம். பிறகு பிற்பகல் 3.14 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.

அதன் பிறகு மாலை 4.25 மணிக்கு பிரிட்டன் முழுவதும் ராணிக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்படும். இரவு 8.30 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ராணியின் உடல் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தை சென்றடையும்.

நள்ளிரவு 12 மணிக்கு அவரது உடல் அவரது கணவர் பிலிப் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here