பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்த தமது ரிட் மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய உள்ளதாக மக்கள் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவரான சட்டத்தரணி விஜயகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேயிலை தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க நிலையம் என்பனவற்றுக்கு 2016 இல் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினால் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கபபட்டுள்ளது என்பது புரியாமல் இருக்க முடியாது என மக்கள் தொழிலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.