முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்களாக கடமையாற்றிய 11 பெண்களும் டயகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு முதல் இந்த பெண்கள் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இவ்வாறு ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்களாக பணியாற்றிய 5 பேரிடம் நேற்றைய தினம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார்களா அல்லது வேறு விதத்தில் துன்புறுத்தப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, டயகம பகுதியைச் சேர்ந்த பெண் மாத்திரம் பணிக்காக அழைத்து வரப்பட்டமைக்கான காரணம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.