ரூ.3.50 கோடி சம்பளம் – ‘போர் அடிக்குது’ என வேலையை ராஜினாமா செய்த இளைஞர்!

0
212

சீனாவைச் சேர்ந்த மைக்கேல் லின் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் நெட்பிளிக்ஸில் மூத்த சாஃப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இந்திய மதிப்பில் ரூ.3.50 கோடி ஆண்டு வருமானம். இவர் திடீரென தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார். இதுகுறித்து அவர் தனது லிங்கடின் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அந்த வேலையிலிருந்து விலகிவிட்டேன். இலவசமாக உணவு, அளவுக்கு அதிகமான ஊதியம், ஓய்வு நேரம், பெரிய நிறுவனம் என எனக்குக் கிடைத்தது.

இருப்பினும் எனக்கு இந்த வேலை போர் அடித்ததால் விலகி விட்டேன். இதையும் படியுங்கள்: நியூயார்க்கில் 21 வயதுக்கு உட்பட்டோர் துப்பாக்கி வாங்க தடை நான் வேலையிலிருந்து விலகப்போகிறேன் என்றவுடன் என் பெற்றோர், எனது வழிகாட்ட ஆகியோர் எதிர்த்தனர். அடுத்த பணியை உறுதி செய்யாமல் வேலையிலிருந்து ராஜினாமா செய்யாதீர்கள்.

அடுத்த வேலைக்கான ஊதியத்தை உறுதி செய்தபின் செல்லுங்கள் என்றனர். ஆனாலும் எனக்கு பிடிக்காததால் வேலையை விட்டுவிட்டேன் ஆரம்ப காலகட்டத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். இருப்பினும் சாஃப்ட்வேர் எஞ்சினியர் வேலை என்பது ஒரே மாதிரி வேலைகளை தொடர்ந்து செய்வதுதான். கொரோனாவுக்கு பின் ஊரடங்கில் உடன் பணிப்புரிபவர்களுடன் பழக வாய்ப்பில்லாமல் போனது. அதனால் வேலை அலுத்துவிட்டது” இவ்வாறு மைக்கேல் லின் தெரிவித்துள்ளார். மைக்கேல் லின் நெட்பிளிக்ஸில் பணிப்புரிவதற்கு முன் அமேசானில் பணிபுரிந்து வந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here