இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி இந்தாண்டின் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி உள்ளது. தொடர்ச்சியாக 8-வது முறையாக பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது.இந்தாண்டில் ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணிகள் ஆர்டர் வந்துள்ளது.
ஜனவரி 1 ஆம் திகதி மட்டும் 4,30,000 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டன.2.49 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டருடன் அறிமுகமானார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நகரங்களை விட, ஹைதராபாத்தில் அதிக பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஒரு பயனர் 42.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவுகளை ஆர்டர் செய்தார் என்று ஸ்விக்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிக்கன் பிரியாணி மிகவும் பிடித்தமானதாகத் தொடர்ந்தாலும், சைவ உணவு உண்பவர்களும் அதிகளவு வெஜ் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.