மாஸ்க்கை துவைக்காமல் அடிக்கடி பயன்படுத்துறீங்களா? இதை கவனிங்க..!

0
191

கடந்த 2020ம் ஆண்டு முதல் உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தாக்கிய கொரோனா வைரஸ், இப்போது பல்வேறு பிறழ்வுகளுடன் அதிதீவிரமாக பரவி வருகின்றன. தற்போது, இந்த வைரஸில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகள் வந்திருந்தாலும், தொற்று ஆரம்பமான காலத்தில் இருந்தே முகக்கவசம் ஒரு உயிர்காக்கும் கருவியாக இருந்து வருகிறது. அனைத்து நாடுகளிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர கைகளை கழுவுதல் மற்றும் சமூக விலகலை கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் டெல்டா வேரியண்ட் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதிகாரிகள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து மற்றும் கோவிட்-பொருத்தமான நடத்தையைப் பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தி வருகின்றன.

மாஸ்க்னே : மிகவும் பொதுவான தோல் நிலைகளில் ஒன்று “மாஸ்க்னே”. அதாவது இது சிவத்தல் மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும் ஒரு தோல் முகப்பரு ஆகும். முகக்கவசம் அணிவதால் அந்த குறிப்பிட்ட பகுதியில் சருமம் அதிக வியர்வையை வெளிப்படுத்தும், அவை சரும துளைகளை அடைத்து முகப்பருவுக்கு வழிவகுக்கிறது.

தோல் பிரச்சனை: நீண்ட நேரத்திற்கு ஒரே முகக்கவசங்களை அணிவது ஒருவரில் தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.The Most (and Least) Effective Face Masks, According to Research | Health.com

தோல் பிரச்சனை: நீண்ட நேரத்திற்கு ஒரே முகக்கவசங்களை அணிவது ஒருவரில் தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் : ஒரே முகக்கவசத்தை அடிக்கடி நீண்ட நேரம் உபயோகிப்பது உங்கள் தொற்றுநோயை அதிகரிக்க வழிவகுக்கும். ஏனெனில் வைரஸ் உங்கள் முகக்கவசத்தில் ஒட்டிக்கொள்ளலாம். இதுபோன்ற சமயத்தில் முகக்கவசங்களை துவைக்காமல் போட்டுக்கொண்டால் அது தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.A Mask Brace Can Make Your Face Mask More Effective: Study

நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் : ஒரே முகக்கவசத்தை அடிக்கடி நீண்ட நேரம் உபயோகிப்பது உங்கள் தொற்றுநோயை அதிகரிக்க வழிவகுக்கும். ஏனெனில் வைரஸ் உங்கள் முகக்கவசத்தில் ஒட்டிக்கொள்ளலாம். இதுபோன்ற சமயத்தில் முகக்கவசங்களை துவைக்காமல் போட்டுக்கொண்டால் அது தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

இது கருப்பு பூஞ்சை தொற்றை ஏற்படுத்துமா? சுகாதாரமற்ற முகக்கவசங்கள் மியூகோர்மைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) நோய்த்தொற்றுக்கு பங்களிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது உண்மையா என அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியாது.

இது கருப்பு பூஞ்சை தொற்றை ஏற்படுத்துமா? சுகாதாரமற்ற முகக்கவசங்கள் மியூகோர்மைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) நோய்த்தொற்றுக்கு பங்களிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது உண்மையா என அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியாது.Keep Your Mask On: Reasons Why Experts Say COVID-19 is Airborne

எந்த மாதிரியான முகக்கவசங்களை பயன்படுத்தலாம்? நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பிறகு அப்புறப்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை முகக்கவசங்களை தேர்வுசெய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களது தோல் மிகவும் சென்சிட்டிவாக இருந்தால், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பருத்தி முகக்கவசங்களை தேர்வு செய்யவும். ஆனால் ஒருமுறை பயன்படுத்திய மாஸ்க்கை துவைக்காமல் மீண்டும் அணியக்கூடாது. அதனை நன்கு துவைத்து பயன்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here