ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ரொசல்லை பகுதியில் வேன் ஒன்று சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் வான் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த விபத்து வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை நருக்கும்,ரொசல்ல சந்திக்கும் இடைப்பகுதியில் இன்று (26) சுமார் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது, கொழும்பிலிருந்து வெலிமட நோக்கி சென்றுக்கொண்டிருந்து வேனே இவ்வாறு விபத்துத்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்து வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாஞ்ஞன்