ரொட்டி மாவுக்கும், மைதா மாவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன..? தெரிந்து கொள்ளுங்கள்

0
148

ரொட்டி மாவை பெரும்பாலும் பிரெட் மாவு என்றே குறிப்பிடுகின்றனர்.

பேக் செய்யப்படும் அனைத்து வகை உணவுப் பொருட்களுக்கும், அதன் அவுட்டர் லேயரில் ஒரு மாவுப் பொருள் இடம்பெற்றிருக்கும். பெரும்பாலும் இதற்கு மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் ரீதியாக சரியான அளவுகோல் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே பேக்கிங் என்பது சிறப்பாக வரும்.

நம் நாவுக்கு சுவையூட்டக் கூடிய ரொட்டி அல்லது மைதா மாவு வகைகள் ஏராளமான உணவு வகைகளில் இடம்பிடிக்கின்றன. குறிப்பாக, நாம் பெரிதும் விரும்பி உண்ணும் புரோட்டாவானது மைதா மாவில் செய்யப்படுகிறது. இதை ரொட்டி மாவிலும் கூட செய்யலாம். பப்ஸ், சமோசா மற்றும் இனிப்புகள் உள்பட எண்ணற்ற உணவு வகைகளை தயாரிக்க மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. ரொட்டி மாவு மற்றும் மைதா மாவு இரண்டும் எப்படி தயார் செய்யப்படுகிறது, அதில் உள்ள சத்துக்கள் என்ன? எந்தெந்த உணவுகளில் இதை பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தச் செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

ரொட்டி மாவு என்றால் என்ன

இதை பெரும்பாலும் பிரெட் மாவு என்றே குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் பெயருக்கு ஏற்றாற்போல பிரெட் தயாரிக்க பயன்படுகிறது. இது கடினமான கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் 13 முதல் 14 சதவீதம் வரையில் குளூட்டன் அடங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் 12 முதல் 14 சதவீதம் வரையில் புரதம் இதில் இருப்பதாக கோதுமை உணவுக் கவுன்சில் தெரிவிக்கிறது. இந்த புரதம் மற்றும் குளூட்டன் ஆகியவற்றுடன் யீஸ்ட் சேரும்போது பிரெட் கிடைக்கிறது. அதாவது இந்த பிரெட் என்பது அடர்த்தி குறைவாகவும், மிக சாஃப்ட்டாகவும் இருக்கும்.

மைதா மாவு

மைதா மாவு என்பது கடினமான மற்றும் மிருதுவான கோதுமையை கொண்டு தயார் செய்யப்படுகிறது. பொதுவாக பிஸ்கட், கேக் மற்றும் பப்ஸ் போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது. ஹோட்டல்களில் சாப்பிடும்போது நமது விருப்பத்திற்கு உரிய தேர்வாக இருக்கும் புரோட்டா தயாரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

மைதா மாவில் 8 முதல் 11 சதவீதம் வரையில் புரதம், 12 சதவீதம் குளூடென் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் என்பது பிரெட் போல அடர்த்தி குறைவாக இருக்காது. அதேபோன்ற டெக்சர் இதில் கிடைக்காது.

இரண்டையும் மாற்றி பயன்படுத்தலாமா

ரொட்டி மாவை கொண்டு, மைதா உணவுப் பொருட்களையும், மைதாவை கொண்டு ரொட்டி உணவுப் பொருட்களையும் தயாரிக்க முடியுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்பும். ஆனால், சமையல் கலை வல்லுநர்கள் அப்படி செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர். வேறு வழியே இல்லாத பட்சத்தில், நீங்கள் விரும்பிய மாவு கிடைக்காத பட்சத்தில் மாற்று உபயோகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, பிஸ்கட் தயாரிக்க நீங்கள் மைதாவை பயன்படுத்தாமல் ரொட்டி மாவை பயன்படுத்தினால், நீங்கள் எதிர்ப்பார்த்த சுவை கிடைக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here