விபத்தில் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை நவலோக வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக நேற்று கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில், பொலிஸாரின் தடையை மீறி செல்ல முற்பட்ட போதே வீதி மறியல் விழுந்ததில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
தற்போழுது அவரின் நிலை வழமைக்கு திரும்புவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.