லக்ஷபான நீர்வீழ்ச்சியில் நீராடிய வெளிநாட்டு பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்பிரித்தானிய நாட்டைச்சேர்ந்த கருப்பினத்தவரான 29 வயதுடைய ஓல்டி பூபோ இயய்பெம் ஒசுனியா என்பவரே இவ்வாறு 01.01.2019 சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
தனிது காதலியுடன் இலங்கை வந்திருந்த குறித்த வெளிநாட்டு பிரஜை நோட்டன் பிரிட்ஜ் சப்தகன்னியா மலைத்தொடரை பார்வையிட்டப்பின் ( 01) மாலை 2 மணியளவில் லக்ஷபான நீர்வீழ்ச்சியில் நீராடிய போது சுழியில் சிக்குண்டு காணாமல் போன நிலையில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரும் பிரதேச வாசிகளும் நீரோடையிலிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோணைக்கான டிக்கோயா மாட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா