லங்கா சதொச மேலும் பல பொருட்களின் விலையினை குறைத்தது

0
154

ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த விலை குறைப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.

இதனால் 425 கிராம் உள்ளூர் டின் மீன் 35 ரூபாவால் குறைக்கப்பட்டு 650 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பயறு விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1,100 ரூபாவாகும்.

ஒரு கிலோ நெத்தலி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 1,090 ரூபாவாகும்.

ஒரு கிலோ கொத்தமல்லி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 540 ரூபாவாகும்.இறக்குமதி செய்யப்பட்ட 425 கிராம் டின் மீன் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 545 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here