லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் : கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் ஒன்பது ஓட்டங்களால் வெற்றி

0
193

நேற்றைய போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18வது போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.

குறித்த போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியை பி-லவ் கண்டி அணி எதிர்கொண்டது.இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்க்காக கடுமையாக போராடியிருந்தன.

இறுதியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி ஒன்பது ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதற்கமைய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி , 20 ஓவர்க்ளின் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இருப்பினும் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பெத்தும் நிசங்க 51 ஓட்டங்களையும் இலங்கையின் இளம் இடதுகை துடுப்பாட்ட வீரரான நிபுன் தனஞ்சய 40 ஓட்டங்களையும் பெற்று இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்

பந்துவீச்சில் பி-லவ் கண்டி சார்பில் அணி தலைவர் வனிந்து ஹசரங்க , ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதனை தொடர்ந்து 170 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பி-லவ் கண்டி 20 ஓவர்களில் நிறைவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.பி-லவ் கண்டி அணி சார்பில், வனிந்து ஹசரங்க 40 ஓட்டங்களையும் ஆசிப் அலி 33 ஓட்டங்களையும் இளம் வீரர் அஷேன் பண்டார 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய வீரர்கள் அனைவரும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ஓட்டங்களில் வெளியேறினார்.பந்து வீச்சில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி சார்பில், மதீஷ பத்திரன மற்றும் சூழல் பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நேற்றைய போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

பந்து வீச்சிலும், களத்தடுப்பிலும் இரு அணிகளும் ஓரளவு நன்றாக செயற்பட்டாலும், துடுப்பாட்டத்தில் இரு அணிகளிலும் பிரகாசிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here