லங்கா ஹொஸ்பிடல் கைக்குண்டு சம்பவத்தில் தமிழ் இளைஞன் கைது- பின்னனி என்ன?ஃ

0
183

கொழும்பு – நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் நேற்றையதினம் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு்ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமரா காணொளியின் ஊடாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் கைக்குண்டை கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞன், வைத்தியசாலைக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் கட்டட நிர்மாணப் பணிகளில் கடமையாற்றி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத் தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைக்குண்டின் பாதுகாப்பு ஆணியை கழற்றி, நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த மருத்துவமனையில் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா ஹொஸ்பிடல் கைக்குண்டு சம்பவத்தில் தமிழ் இளைஞன் கைது
கைப்பற்றப்பட்ட கைக்குண்டு, காவல்துறை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழப்பு பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here