இந்த கடிதத்தில் ‘பத்தலகொட தோட்ட மக்களின் கருணை கோரிக்கை ‘ என தலைப்பிடப்பட்டிருந்தது. அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட மலையக அரசியல்வாதிகளுக்கு குருநாகல் – பதலகொட மக்கள் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.
குறித்த கடிதத்தில், தாங்கள் வாழும் அவல வாழ்க்கை தொடர்பிலும், இந்த லயன் அறைகளில் வாழும் அடிமை வாழ்க்கை வேண்டாம் எனவும் லயத்து வாழ்க்கையில் இருந்து சுதந்திரத்தை பெற்றுத்தாருங்கள் எனவும் அவர்களது கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இவற்றிலிருந்து சுதந்திரத்தை பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் குறித்த கடிதத்தை எழுதுவதாகவும் அவர்களது வாழ்க்கைக்கு ஒரு விடியலைத் தேடித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் , இந்த கடிதத்தில் ‘பத்தலகொட தோட்ட மக்களின் கருணை கோரிக்கை ‘ என தலைப்பிடப்பட்டிருந்தது.
‘பத்தலகொட தோட்ட மக்களின் கருணை கோரிக்கை ‘
இதேவேளை , குருநாகல் – இப்பாகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பத்தலகொட தோட்டத்தில் வசிக்கும் 300 மலையக தமிழர்களை குறித்த தோட்டத்தை விட்டு வெளியேற்ற தோட்ட உரிமையாளர் நடவடிக்கை மேற்கொள்வதாக தோட்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடன் ஊடகவியலாளர்கள் சிலருடனும் பதலகொட தோட்டத்துக்கு நேரடியாக சென்று மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்திருந்த நிலையிலேயே இவ்வாறு அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்திருந்தனர்.
‘மாண்புமிகு மலையக மக்கள்’ கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட மலையக எழுச்சிப் பயணம் மாத்தளையில் நிறைவடைந்த நிலையில், குருநாகலில் உள்ள மலையக தமிழ் மக்கள் சிலர் இவ்வாறு பெரும் ஆபத்தில் உள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, குருநாகல் – இப்பாகமுவ பிரதேசசபைக்கு உட்பட்ட பத்தலகொட தோட்டத்தில் வசிக்கும் 300 மலையக தமிழர்களை தோட்டத்தைவிட்டு வெளியேற்ற தோட்ட உரிமையாளர் நடவடிக்கை எடுப்பதாக “ஒருவன்“ செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையீடு செய்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளார்.
150 வருடங்களுக்கு மேலாக 4,5 தலைமுறையாக குருநாகல் பத்தலகொட தோட்டத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி மலையக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
லயத்து வீடுகளில் இனியும் வசிக்க முடியாது என கூறி தங்களுக்கு காணிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்தது வருகின்றனர்.